தினசரி கூலித் தொழிலாளிகளுக்கு மட்டுமே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வருவதாக குற்றவாளி வாக்குமூலம் மேலும் 10 கிலோ கஞ்சா , மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை மாதாவரம் மதுவிலக்கு அமலாக்குப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை புழல் அடுத்த காவாங்கரை பேருந்து நிறுத்தும் அருகில் சந்தேகத்தின் இடமான நபர் தனது இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலத்தை கூவி கூவி விற்பனை செய்தார் தகவல் அறிந்து வந்த மாதவரம் மதுவிலக்கு அமலாக்குப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சண்முகசுந்தரம் என்பவரை கஞ்சா பொட்டலத்துடன் கையும் காலமாக பிடித்தன. பின்னர் மாதவரம் மது அமலாக்குப் பிரிவு காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பிறகு முதற்கட்ட விசாரணையில் திருவள்ளூர் மாவட்ட திருப்பாலைவனம் பகுதியில் உள்ள தனது வீட்டில் 10 கிலோ கொண்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார்.
மேலும், போலீசார் தீவிர விசாரணையில் செய்ததில் ஆந்திரப் மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தனது இல்லத்தில் பதுக்கி வைப்பதாகவும் மேலும் சாலை வீதி விளக்கு இல்லாத இடத்தில் உள்ள பகுதியில் ஆட்டோ டிரைவர்களுக்கும் தினசரி கூலி தொழிலாளிகளுக்கும் கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இதை அடுத்து மாதவரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட நபரின் இருசக்கர வாகனத்தையும் 10 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வியாபாரி சோமசுந்தரத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆசிரியப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.