மீண்டும் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கம்..! ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா..!
போதைப் பொருள் இல்லா தமிழகம் உருவாகுவதற்கு தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவது குறித்து மாநகர காவல் ஆணையர். பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இருந்தாலும் அவ்வப்பொழுது வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரக்கூடிய நபர்கள் ஓடிஸா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததை அடுத்து திருப்பூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர். பிரபா தேவி தலைமையில் காவல்துறையினர் ரயில் நிலையம் அருகே பயணிகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் ரயில் நிலையம் எதிரே உள்ள தபால் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான நின்றிருந்த நபர்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது காவல்துறையினரின் விசாரணையில் இருந்து ஒருவர் மட்டும் தான் கையில் கொண்டு வந்திருந்த பேக்குடன் தப்பித்துச் செல்ல முற்பட்டார் தொடர்ந்து காவல்துறையினர் அவரை துரத்தி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மூவரும் ஆந்திர மாநிலம் சென்று கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருந்த கஞ்சா போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.
மேலும் காவல்துறையினரின் விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அமீர், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சபீர் பாஷா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 7 கிலோ 600 கிராம் எடை கொண்ட கஞ்சா பொருளை கைப்பற்றி மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அமீர் மற்றும் முருகேஸ்வரி இருவர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..