கிறிஸ்தவர்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டம்..!! பரபரப்பான விருதுநகர்..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கருப்பு பேஜ் அணிந்து பங்கேற்றனர். பங்குத் தந்தை. வட்டார அதிபர் சந்தன சகாயம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் கிறிஸ்தவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி இரவு பெய்துவரும் மழையின் அளவு அதிகரித்து ஐந்தாவது நாளான நேற்று செங்கம் திருவண்ணாமலை ஆரணி, தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று இரவு பெய்த கன மழையில் அதிக பட்சமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 487.2 மில்லிமீட்டர் மழையும் சராசரியாக 40.60 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் கிணறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனத்தில் இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் உறவு அறக்கட்டளை இணைந்து நடத்திய பெண்களுக்கான சுயவேலை வாய்ப்பு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. திருப்பாலைவனம் பகுதியில் வசிக்கும் 35கிராம பெண்களுக்கு எம்ப்ராய்டரி மற்றும் துணி பெயிண்டிங் பயிற்சி 30 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது . இந்த பயிற்சிக்கான துவக்க விழா திருப்பாலை வனம் மகளிர் கட்டிட மையத்தில் நடைபெற்றது.
உறவு அறக்கட்டளை இயக்குனர் எம்.ரமேஷ் தலைமை தலைமை ஏற்று நடத்திய இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசும் போது பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழி முறைகளாக தன்னம்பிக்கை யோடும் விடா முயற்சியுடன் கடின உழைப்பை செலுத்தி வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு இந்த பயிற்சி உறுதுணையாக இருக்கும் என வாழ்த்தினார். உறவு அறக்கட்டளை செயலர் முத்து நன்றியுரை ஆற்றினார்.
மயிலாடுதுறை அருகே பொறையாரில் டி.பி.எம்.எல் கல்லூரி 1972-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 1974- ஆம் ஆண்டு முதல் இயற்பியல் துறை செயல்பட்டு வருகிறது. இத்துறையில் 1980 முதல் 2000 வரை 20 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். டிஎல்எல்சி பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் நடைபெற்ற அதன் திறப்பு விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி இந்நாள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும் உள்ளதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா,பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்து விட்டுச் செல்கின்றனர். தற்சமயம் நேற்று இரவு முழுவதும் பெய்த கன மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வந்தனர் ஆனால் வனத்துறையினர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை வித்துள்ளனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..