சோளிங்கர் கோளாத்தம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா..! பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் நேர்த்திகடன்..!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு ஶ்ரீ கோளத்தம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவிழா முன்னிட்டு கோளத்தம்மன் பொன்னியம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆந்திரா கர்நாடக ஆகியோர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமியை வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் நகராட்சி பகுதியில் இருந்து படத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மினி வேன், லோடு ஆட்டோ வாகனங்களில் கோளத்தம்மன் உற்சவம் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் ஊக்கு குத்து ,அலகு குத்துக்கொண்டு வாகனங்களை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமியை வழிபட்டனர்.
திருவிழாவில் காவல் ஆய்வாளர் 5 பேர் உதவி ஆய்வாளர்கள் உட்பட்ட 190 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் முன்னதாக நகராட்சி கவுன்சிலர்கள் ஆஞ்சநேயர், அசோகன், சிவானந்தம் , வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஆகியோர் சுவாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்