குழந்தை திருமணம்… தகவலில் பேரில் மடக்கி பிடித்த போலீசார்…
சென்னை தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (30). என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி மேற்கு தாம்பரம், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், சிறுமி கர்ப்பமடைந்துள்ளதை தொடர்ந்து, மூன்றரை மாதம் முடிவடைய உள்ள நிலையில் திடீரென சிறுமிக்கு அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை கடந்த 8ம் தேதி முதல் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, சிறுமி குறித்து மருத்துவமனையில் இருந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சிறுமியின் கணவர், சிறுமியின் மாமியார் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்னர் சிறுமியின் கணவரான ஆனந்த் மற்றும் அவரது தாயார் விஜயா (55) ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்