முதலமைச்சர் போட்ட உத்தரவு..! வயநாடு விரைந்த அமைச்சர் எ.வ.வேலு..”
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதியாக 5 கோடி ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீடுகளின் மேல் விழுந்துள்ளது.., மேலும் ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இராணுவ வீரர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல அமைப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இன்று காலை பேரிடர் ஏற்பட்ட இடத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைமைச் செயலாளர் வேணு உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணத்திற்கு உதவிட தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கேரள தலைமைச் செயலகத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து இந்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.