தளபதி 69-ல் விஜயுடன் 3 ஹீரோயினா..?
செப்டம்பர் மாதம் 5 ஆம் நாளில் வெளியான தி கோட் படமானது வெளியான 4 நாட்களிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது. அதற்கு பின் வார நாட்களில் லேசாக குறைந்த வசூல் வேட்டை தற்போது எதுவும் தமிழ் படம் வெளிவராத நிலையில் வாரத்தில் இறுதி நாட்களில் மீண்டும் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
செப்டம்பர் 14 ஆம் நாளான இன்று சுமார் 5 மணியளவில் கேவிஎன் தயாரிப்பானது தளபதி 69 என்ற படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில் தற்போது தளபதி 69 ல் விஜயுடன் 3 முன்னனி நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை சிம்ரன் அவர்கள் விஜயுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் விஜயுடன் நடித்த நடிகைகளான த்ரிஷா, சினேகா என்ற வரிசையில் தொடங்கி அடுத்ததாக சிம்ரன் அவர்கள் தளபதி 69 ல் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் விஜய்க்கு சிம்ரன் ஜோடியாக நடிக்க இருக்கிறாரா என இன்னும் தகவல் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது.
நடிகை சமந்தா அவர்கள் விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் என்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அடுத்ததாக லியோ படத்தில் சமந்தா நடிக்கும் வாய்ப்பானது அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக நடிக்கப்போவதை தவறி த்ரிஷா ஒப்பந்தம் ஆகி நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது சமந்தா உடல்நிலையில் ஆரோக்கியமானதும் தளபதி 69 ல் இணைந்து நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகை மமிதா பைஜூ அவர்கள் தளபதி 69 ல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜயின் தீவிரமான ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கண்டிப்பாக தளபதி 69 ல் இணைந்து நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தளபதி 69 எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சத்யன் சூரியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு என்ன அப்டேட் என பார்ப்போம்.