போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், சமூக சேவகர்களுக்கு விருது வழங்கிய தமிழக முதலமைச்சர்..!!
இந்தியாவில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளார். போலீஸ் அதிகாரிகள்.., மருத்துவர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களை கெளரவித்துள்ளார்.
இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள.., புனித ஜார்ஜ் கோட்டையில் 119 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மூன்றாவது முறையாக கொடியை ஏற்றியுள்ளார்.
அதற்கு முன் காலை 8:49 மணிக்கு கோட்டை கொத்தளம் வந்த முதல்வரை மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா வரவேற்றார். அதன் பின் தென் இந்திய பகுதிகளின் படை தலைபதி லெப்டினன்ட் ஜெனரல் கரண் சிங் பிரார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிகுமார் திங்ரா, ஏர் கமாண்டர் ரத்திஷ் குமார், கடலோர காவல்படை அதிகாரி ஆனந்த் பிரகாஷ் படோலா, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் ஆகியோரை வரவேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். முதலாவதாக
* திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசாலுக்கு தமிழர் விருதும்,
* வசந்தா கந்தசாமிக்கு அப்துல் கலாம் விருதும்,
* முத்தமிழ் செல்விக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் வழங்கினார்.
* ஆதரவற்ற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர் தேரணி ராஜனுக்கும்,
* பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்தது விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தற்காக மருத்துவர் ஜெயகுமாருக்கு
தமிழ்நாடு அரசு விருதும்,
* கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாந்தி நிலையத்திற்கும்,
* சமூக பணியாளர் கோவையை சேர்ந்த ரத்தன் வித்யாசாகருக்கும்,
* மாற்றுத்திறனாளிகளை அதிகம் அளவில் பணியமர்த்திய மதுரை மாவட்டத்தில் உள்ள டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும்,
* சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியான ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
* மகளிர் நலனுக்காக பணியாற்றியதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒளி நிறுவனத்திற்கும்,
* சிறந்த சமூக சேவகர் விருதை கோவையை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கும், வழங்கப்பட்டது.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு. சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலமாக 9வது மண்டலம் முதல் பரிசையும், 5வது மண்டலம் இரண்டாவது பரிசையும் வாங்கியது. சிறந்த மாநகராட்சியாக முதல் பரிசு திருச்சிக்கும் இரண்டாவது பரிசு தாம்பரம் மாநகராட்சிக்கும் வழங்கப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..