தமிழகமக்கள் நலன் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ..!!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் பருவமழையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்.., சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.., மேலும் சாலையோர மக்களின் பாதுகாப்பிற்கும் வழி செய்யப்பட்டுள்ளது..,
கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களின் நலனை எண்ணி மருத்துவசேவை வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.., மேலும் நீங்கள் இருக்கும் பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டால்.., முதலமைச்சர் உதவி எண்ணிற்கு அழைத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவித்துள்ளார்..,
இது தற்போது மதிமுகதிற்கு கிடைத்த செய்தி மேலும் இதுபோன்ற பல செய்திகள் பற்றி தொடர்ந்து படிக்க.., மதிமுகமில் இணைந்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..