ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளும் பாஜக அரசும், எதிர்கட்சிகள் ஒன்றோடு இணைந்தும் தேர்தலை சந்திக்க உள்ளனர். இதில் பல்வேறு வியூகங்களை இருப் பெரும் பிரிவினர் உருவாக்கி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஒருசேர இணைந்து பாஜகவை எதிர்கொள்கிறது. இதில் முக்கிய பங்கை ஆற்றியதே தமிழக முல்வர் ஸ்டாலின் தான். கடந்த மார்ச் மாதம் தனது பிறந்தநாளையொட்டி கார்கே முதல் அகிலேஷ் யாதவ் வரை அனைவரையும் வரவழைத்து மாபெரும் மாநாடு போல் நடத்தினார். அதில் இருந்து தொடங்கியது தான் இந்த மாபெரும் இந்தியா கூட்டணி.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆரம்பிக்கலாங்களா… வணக்கம் கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவில் உங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். திமுக 75 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் பலம் பெரும் கட்சி, இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி, பேரறிஞர் அண்ணா, கலைஞர்னு இந்திய நிலப்பரப்பில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் நாங்க, இப்போ இந்தியாவிற்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கோம். 2024 முடியப்போற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்காங்கஎதிர்காலத்தில் நாம கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும்னு ஒரு ஆடியோ சீரியஸ்ல பேச போறேன் .
எதிர்காலத்துல நாம கட்டமைக்க நினைக்கிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்க போகுதுன்னு ஒரு ஆடியோ சீரியஸில் பேச போகிறேன். அதற்கு ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா.? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள் என்ன முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த பதிவு தெரிவித்துள்ளார்.
Awakening India's Tomorrow, A Southern Voice Speaks for #INDIA!#Speaking4India pic.twitter.com/VqdY0PoxWF
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023