சினிமா பிரபலம் மாரிமுத்து மறைவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து, இயக்குனர் ஆனவர் மாரிமுத்து.
ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன .
அவரை இழந்து வாழும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.