சென்னை எழும்பூரில் அரசு மருத்துவமனையின் 200-வது ஆண்டை ஒட்டி கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் ஆக.27 இன்று திறந்து வைத்தார்.
கண் மருத்துவமனையில் ரூ.195 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் மற்றும் நவீன கருவிகள் மற்றும் மருத்துவ ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
மேலும் ரூ.63.60 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் புதிய கட்டடங்களை திறந்து வைத்துள்ளார்.