கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம் பல மேடையில் யாரும் ஏறக்கூடாது, தரிசனம் செய்யக்கூடாது, தேவாரம் பாடக்கூடாது என கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். இதற்கு பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இதையடுத்து, நேற்று(மார்ச்.24) சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனகசபை விவகாரம், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை சிதம்பரத்தில் கோவில் தொடர்பாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சிதம்பரம் நகரில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் ரவி இன்று(மார்ச்.25) விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் பக்தர்கள் நலனுக்காக இந்த தடை உத்தரவு விளக்கி கொல்லப்படுவதாக கோட்டாசியர் ரவி தெரிவித்தார்.