சென்னை டூ கன்னியாகுமரி..!! என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!! பரபரப்பான முக்கிய பகுதிகள்..!!
சென்னை, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்…
பல்வேறு உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்..
விசாரணை :
இதற்கிடையில் ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக சில விவரங்களானது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டுள்ளது..
இந்த வழக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் அனைத்தும், என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். வழக்கின் முதல் விசாரணையை சென்னை ராயப்பேட்டை செயல்பட்டு வரும் “ஹிஸ்புத் தஹ்ரிர்” என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.. இந்த அமைப்பினருக்கு ஆதரவாக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டு வந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
அதரடி நடவடிக்கை :
ஆள்சேர்ப்பில் ஈடுபட்டு வந்த டாக்டர் ஹமீது உசேன், மற்றும் அவருடைய அப்பா மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய 6 பேரை பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்., சென்னையை தொடர்ந்து நாகர்கோவிலிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..
நாகர்கோவில் நடத்தப்பட்ட சோதனையில் ஆள் சேர்த்த வழக்கிழ் பல்வேறு பிரிவினர் சம்மந்தப் பட்டிருப்பதாகவும் அவர்கள் புதுகோட்டையில் தங்கி இருப்பதாகவும் சில தகவல் கிடைத்துள்ளது., அந்த தகவலின் பேரில் புதுகோட்டையில் நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட்டிஸ்க்குகள் கிடைத்துள்ளது.. ஆனால் அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் தப்பி சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
பரபரப்பு :
சென்னையில் தாம்பரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்., நேற்று நள்ளிரவில் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே., அதிகாரிகள் ஒரு குழு அமைத்து இன்று அதிகாலையிலேயே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்…
இன்று அதிகாலையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..