விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டில் விசாரணையை ஏடிஎஸ்பி மகேஸ்வரி தொடங்கியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி 8-பேர் உயிரிழந்த விவகாரம் – சிபிசிஐடி போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
முதல்கட்டமாக விஷச்சாராயம் அருந்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெருங்கரணையை சேர்ந்த அஞ்சலை என்பவரிடம் செங்கல்பட்டு மாவட்ட விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.
சித்தாமூர், அச்சரப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து கோப்புகள் பெறப்பட்டுள்ள நிலையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
விஷச்சாராயம் அருந்தி அஞ்சலையின் கணவர் சின்னதம்பி மற்றும் தாய் வசந்தா உயிரிழந்த நிலையில் அஞ்சலை மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post