ச்சீ ச்சீ ச்சீ ச்சீ ரே நானி ச்சீ…!! அட இந்த பாட்டுக்கு பின்னடி இப்படி ஒர் ஸ்டோரியா…?
சினிமா பாடல்கள் மட்டுமல்ல ஆல்பம் பாடல்களும் ஒரு வித்தியாசமான உணர்வினை நம் ஆழ்மனத்திற்குள் கண்டிப்பாக தோன்றச்செய்யும். இவ்வளவு ஏன் அந்த காலத்தில் எல்லாம் வரும் கான பாடல்கள் கூட அதாவது 80ஸ் மற்றும் 90ஸ் களின் காலங்களில், வந்த பாடல்கள் எல்லாம் ஒரு வசந்த காலம். ஆனா இப்போ வர பாடலில் எத்தனை பாடல்கள் அர்த்ததுடன் உள்ளது..?
அதுலையும் நான் இப்போ ஒரு பாட்டு கேட்டங்க, ச்சீ ச்சீ ச்சீ ச்சீ ரே நானி சீ. இந்த பாட்டு 30 வருடத்திற்கு முன்னாடியே வந்து இருந்தாலும், இப்போ இந்த பாட்டு தான் வைரலா போயிட்டு இருக்கு. அப்படி இந்த பாடலில் என்னதான் இருக்கு..?
1992-ல் வெளியான ஓடிய நாட்டுப்புற பாடல் தொகுப்பு ”பலிபுல் (Baliphul)”. இந்த தொகுப்பில் இடம்பெற்ற 8 பாடல்களில் ஒரு பாடல் தான் இந்த ச்சீ ச்சீ ச்சீ ச்சீ ரே நானி. பிரபல ஓடியா இசைக் கலைஞரான சத்ய நாராயணன் இந்த பாடலுக்கு இசையமைத்து, பாடல் எழுதி, பாடியும் இருக்கிறார்.
பழங்குடிகள் சூழ, ஒடிசாவின் கோராட்புட் பகுதியில் பிறந்து வளர்ந்த சத்யா ஒரு வழக்கறிஞர். கூடவே தான் வளர்ந்த பகுதியின் கலாச்சாரத்தையும் அதன் தொன்மை மிகுந்த நாட்டுப்புற இசையை மற்றும் பாடல்களை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பிலும் இயக்கினார். இந்த பாடல் ஒடிசாவின் மரபுகளை அதன் ஆன்மா சிதையாமல் அதே நேரம் அனைவருக்கும் சென்று சேரும் வகையிலும் பாடல்களை உருவாக்கினார். அப்படியான பாடல்களில் ஒன்றுதான் ச்சீ ச்சீ ச்சீ ச்சீ ரே நானி பாடலும். இந்த பாடலை இயற்றிய சத்ய நாராயணன் 2012ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி உடல்நலக்குறைவினால் காலமானார். ஆனால் இசையால் அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.
காதல் தோல்விப் பாடலான இந்தப் பாடலின் காட்சி உருவாக்கத்தினை இணையவாசிகள் முதலில் ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி இணையத்தில் பகிர்ந்தனர். ஆனால் இது தொடக்கத்தில் இணையவாசிகளால் கிண்டல் அடிக்கப்பட்டாலும், போகப் போகப் பாடல் பலரது மனதைக் கவர்ந்துவிட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..