அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் மறைவு…!! முதலமைச்சர் இரங்கல்..!!
அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் ரமேஷின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக நமது அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றியவர் என்றும் உக்ரைன் போர்க்காலக்கட்டத்தில் தமிழக மாணவர்களை அழைத்து வருவதில் திறம்படச் செயலாற்றியவர் என புகழஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றி வந்த சக அதிகாரிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..