மூதாட்டியை ஏமாற்றி கொள்ளை…!! இளைஞர்கள் போலீசில் சிக்கியது எப்படி…?
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் மூதாட்டியிடம் 70 ஆயிரம் பணம் மோசடி செய்த இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மனைவி ராஜேஸ்வரி இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இரண்டாவது மகன் வேல்முருகன் அவரது ஏடிஎம் கார்டை தனது தாய் ராஜேஸ்வரிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு செல்வதற்காக மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம் மையத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி சென்று பணம் எடுக்க சென்ற ராஜேஸ்வரியிடம் மர்ம நபர்கள் இருவர் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை வாங்கியுள்ளனர்.
பின்னர் ஏடிஎம் மையத்தில் பணம் இல்லை என கூறி திருப்பி கொடுத்து சென்ற நிலையில் சிறிது நேரம் கழித்து மூதாட்டியின் மகன் கார்டு மூலம் 20 ஆயிரம் எடுத்ததாகவும் ஜுவல்லரி கடையில் ரூபாய் 50 ஆயிரத்திற்கு நகை வாங்கியதாகவும் தனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாக மூதாட்டி இடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மூதாட்டி ராஜேஸ்வரி புகார் அளித்ததின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் கார்டை திருடிய நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் 20 ஆயிரம் பணம் எடுத்ததும் வடக்கு ராதை வீதியில் உள்ள ஜுவல்லரியில் 50 ஆயிரத்துக்கு தங்க நாணயங்கள் வாங்கியதும் தெரிய வந்தது.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து நகர் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை நெசவாளர் காலனி தோகைமலையை சேர்ந்த காட்ஜான் வயது 23, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கருங்கடல் ஆர்சி கோயில் தெருவை சேர்ந்த பீட்டர் பிரபாகரன் வயது 32 இரண்டு இளைஞர்களும் ஒன்று சேர்ந்து மூதாட்டி இடம் நூதன முறையில் ஏமாற்றியது தெரிய வந்தது இவர்களை கைது செய்து இவர்களிடம் இருந்த பணம் 20 ஆயிரத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காட் ஜான், பீட்டர் பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலையத்தில் இதே போல் ஒரு சம்பவம் செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை, தேவகோட்டை, சாத்தான்குளம், கும்பகோணம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..