“வசிகரமான அஜித்..” விடாமுயற்சி நடிகை பேட்டி…!!
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசண்ட்ரா., அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் வெப் சீரியஸ்-லும் நடிக்க தொடங்கினார்..
தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் துணை கதா நாயகியாக நடித்துள்ளார்.
இறுதி கட்ட படப்பிடிப்புகள் முடிந்து., டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது..
அதாவது “விடாமுயற்சி திரைப்படம் மிக பிரம்மாண்டாமாக மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளதாகவும்., விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்..
மேலும் இதற்கு முன் நடிகர் அஜித் அவர்களை சந்தித்ததில்லை ஆனால் எல்லோரும் அவரை சந்திக்க ஆசைப்படுவார்கள்.. அது ஏன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை..
ஷூட்டிங் அப்போது தான் எனக்கு புரிந்தது அது ஏன் என்று அவரை போன்ற ஒரு வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை” என நினைத்து வருந்தியதாக அவர் கூறியுள்ளார்..