புவியின் 3வது வட்டப்பாதைக்கு வெற்றி கரமாக சென்ற சந்திராயன் -3 விண்கலம்..!!
சந்திராயன்- 3 மூன்றாவது சுற்று பாதைக்கு சென்றுள்ளது. இது பூமிக்கு மிக அருகில் 200 கிலோ மீட்டர் மற்றும் பூமியில் இருந்து 60,000 கிமீ தொலைவில் சுற்று வட்ட பாதைக்கு சென்று விட்டது என்றும், விண்கலம் சீராக இருக்கிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ ) கடந்த 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகாரமாக பூமியை இரண்டு முறை சுற்றியுள்ளது.
முதல் முறை பூமியை சந்திராயன் 3 விண்கலம் சுற்றும் பொழுது பூமியில் இருந்து அதிக பட்ச தூரத்தை 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து 42 ஆயிரம் கிலோ மீட்டராக அதனுடைய சுற்று பாதையை உயர்த்தி, இரண்டாவது நாள் சுற்றும் பொழுது பூமியில் இருந்து குறைந்த பட்ச தூரமான 175 கிமீ தூரத்தில் இருந்து 200 கிமீ ஆக சுற்று பாதை உயர்த்தப்பட்டுள்ளது. முன்றாவது நாளான இன்று பூமி சுற்றும் பொழுது அதிக பட்ச தூரமாக 42 ஆயிரத்து 60 ஆயிரம் கிலோ மீட்டராக அதன் சுற்று பாதையை அதிகரித்துள்ளது.
தற்போது சந்திராயன் 3 விண்கலம், திட்டமிட்ட படி சீரான நிலையில் இருப்பதாகவும், தேவையான எரிபொருள் இருப்பதாலும் நல்ல முறையில் செயல்படுவதை தொடர்ந்து அடுத்து வருகிற 31ம் தேதி வரை புவி வட்டப்பாதையை சுற்றி வரும். சந்திராயன் 3 விண்கலம், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிலவை நோக்கி பயணிக்க ஆரமித்து விடும் என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 5ம் தேதி நிலவின் சுற்று பாதைக்கு சந்திராயன் 3 விண்கலம் பயணித்து விடும் மேலும் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்கி விடும் எனவும் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post