விண்ணிற்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -3 விண்கலம்
ஸ்ரீ ஹரி கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 3 ஏவப்பட்டது. இது ஆகஸ்ட் 23ம் தேதி அல்லது ஆகஸ்ட் 24ம் தேதி தரை இறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2, என்ற விண்கலத்தை கடந்த 2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திராயன் -2 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்று பாதையை சென்றடைந்தது. எனினும் தொழில்நுட்பக் கோளாரால் திட்டமிட்ட படி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயல் இழந்துவிட்டது.
அதே சமையம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆரிபிட்டர் நிலவில் வெற்றிகரமாக கால் பாதித்தது. இதனை தொடர்ந்து இஸ்ரோ 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் -3 யை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எம்.வி.எம் 3, மற்றும் எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது தளத்தில் ஜூலை 14ம் தேதி மதியம் 2:35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதி கட்ட வேலைகளை நேற்று செய்து முடித்துள்ளனர். இதற்கிடையில் சந்திராயன் 3 விண்கலத்தில் செல்வதற்காக சில ஒத்திகையையும் செய்துள்ளது. அதுவும் வெற்றிகரமாக செயல்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற செயல்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று மதியம் 1 மணிக்கு சந்திராயன் -3, 26 மணி நேர கவுண்டனுடன் தொடங்க பட்டது.
ஶ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
எல்.வி.எம் 3, எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3.
இன்று விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 ஆகஸ்ட் 23-ல் நிலவில் கால் பதிக்கும் 3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும்.
சந்திரயான்-3 நிலவின் தென்பகுதியில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும்.
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்ததை பெருந்திரளாக பொதுமக்கள் பார்வையிட்டனர்.
சந்திராயன்-3 விண்கலம் நிலவிற்கு செல்ல கால தாமாதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்கும். எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது,
Discussion about this post