விண்ணிற்கு செல்ல தயாராகும் சந்திராயன் -3..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2, என்ற விண்கலத்தை கடந்த 2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திராயன் -2 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்று பாதையை சென்றடைந்தது. எனினும் தொழில்நுட்பக் கோளாரால் திட்டமிட்ட படி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயல் இழந்துவிட்டது.
அதே சமையம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆரிபிட்டர் நிலவில் வெற்றிகரமாக கால் பாதித்தது. இதனை தொடர்ந்து இஸ்ரோ 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் -3 யை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எம்.வி.எம் 3, மற்றும் எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது தளத்தில் ஜூலை 14ம் தேதி மதியம் 2:35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதி கட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சந்திராயன் 3 விண்கலத்தில் செல்வதற்காக சில ஒத்திகையை செய்துள்ளது. அதுவும் வெற்றிகரமாக செயல்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் மதியம் 1 மணிக்கு சந்திராயன் -3, 26 மணி நேர கவுண்டனுடன் தொடங்க உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இரண்டாவது தளத்தில் இருந்து நாளை மதியம் 2மணி 37நிமிடம் 17வினாடிகளுக்கு சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.. அதற்காக இன்று பகல் 1மணிக்கு 26 மணி நேர கவுண்டனுடன் தொடங்க இருப்பதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்திராயன்-3 விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரை இறக்கும் நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை அடைந்து விடும் என மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.