சந்திராயன் 3 திட்டம் வெற்றி..! உற்சாகத்தில் இந்தியா..!!
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம், எல்.வி.எம் ஜி.எஸ்.எல்.வி மார்க்ஸ் 3, ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது.
பூமியின் துணைக் கோளான நிலவை இதுவரை சந்திராயன் 1, சந்திராயன் 2 ஆகிய இரண்டு விண்கலன்களை இதற்கு முன் நிலவிற்கு அனுப்பி இந்தியா சோதனை மேற்கொண்டது.., ஆனால் அந்த இரண்டு முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
கடந்த ஜூலை 14ம் தேதி சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சந்திராயன் 3 விண்கலத்தை விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற பிறகு நிலவின் புகை படத்தை பகிர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 18ம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற பிறகு லேண்டரின் சுற்றுவட்ட பாதையில் இருந்து படிப்படியாக குறைந்து அடுத்த கட்ட சுற்று பாதைக்கு நேற்று வந்தடைந்தது.
அதன் பின் நிலவில் இருந்து அதிகபட்சம் 134 கிமீ என்ற தொலைவில் தரையிறங்கும் அதே நேரம் மாற்றப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 21ம் தேதி லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு தரையிறங்கும் என அறிவிய்ப்பு வெளியாகி இருந்தது..,
இன்று மாலை 5.45 மணிக்கு லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு லேண்டர் மால்டு நிலவை நோக்கி தரையிறங்கியது. அதன் படி சந்திராயன் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி விட்டது.
லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..