சந்திரயான்-3 கவுன்டவுன் ஸ்டார்ட்..! இஸ்ரோ வெளியிட்ட புது அப்டேட்..!!
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம், எல்.வி.எம் ஜி.எஸ்.எல்.வி மார்க்ஸ் 3, ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது.
ஆகஸ்ட் 18ம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற பிறகு லேண்டரின் சுற்றுவட்ட பாதையில் இருந்து படிப்படியாக குறைந்து அடுத்த கட்ட சுற்று பாதைக்கு நேற்று வந்தடைந்தது.
ஆகஸ்ட் 21ம் தேதி லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 21ம் தேதி நிலவின் புகை படங்களை வெளியிட்டது. ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு தரையிறங்கும் என அறிவிய்ப்பு வெளியாகி இருந்தது.., அதற்கான பணியும் தற்போது தொடங்கிவிட்டது.
சந்திரயான் 3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை இன்று மாலை 5.44-க்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ள உயரத்துக்கு லேண்டர் 5.44-க்கு வந்தடையும். தொடர்ந்து, தானியங்கி இறங்கு முறைப்படி லேண்டர் வாகனம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கத் தொடங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.