ஆந்திராவில் மீண்டும் முதல்வரான சந்திரபாபு நாயுடு..!!
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி, 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் என்டிஏ கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தார். இருப்பினும், 5 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளார்.
1996 – 2004 காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடு தேசிய அரசியலிலும் கிங் மேக்கராக இருந்தார். இப்போதைய சூழலில் தேசியளவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வருகின்ற ஜூன் 9ம் தேதி சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளார்.
– லோகேஸ்வரி.வெ