அதிகனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு… இந்த மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட்..!
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றன.
இந்தநிலையில் தற்போது காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாக்குமரி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20ம் தேதி வரை தமிழகம், மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்