சாலை விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா..!
நடிகர் ஜீவா அவர்களின் நிஜப் பெயர் அமர் சவுத்ரி. இவரின் அப்பா ஆர்.பி. சவுத்ரி அவர்கள் ஒரு பெரிய தயாரிப்பாளராவார்.
ஆர்.பி.சவுத்ரி சினிமாவில் இருப்பதால் ஜீவாவிற்கு வாய்ப்பு எளிமையாக கிடைத்திருக்கலாம் ஆனால் ஜீவா அவர்கள் தொடர்ந்து சினிமாவில் நிலைத்திருக்க அவருடைய நடிப்பு மட்டுமே காரணமாக அமையும்.
ஆனால் ஜீவா பள்ளிப்பருவத்தில் பள்ளிக்கூடத்தின் ரூல்ஸை மீறி நீண்ட கை உள்ள சட்டை, அப்பாவின் வாசனை திரவியம் அணிதல், நீளமாக முடியை வைத்திருப்பது போன்ற ரகளைகளை செய்பவராக தான் ஜீவா இருந்திருக்கிறார்.
நடிகர் ஜீவா அவர்கள் கிரிக்கெட்டின் மீது அலாதியான ஆசைக் கொண்டிருப்பவர், இவர் சிசிஎல் என்ற நடிகர்களின் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி இருக்கிறார். அதில் அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து தான் அவரை 83 படத்திற்கு நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
ஜீவாவின் திருமணம் ஒரு காதல் திருமணமாகும். பள்ளியில் தன்னுடன் படித்த சுப்ரியா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.
நடிகர் ஜீவா அவர்களுக்கு உயரத்தை பார்த்தாலே பயமாம். இவர் ஒரு படத்திற்காக மூன்று வருடங்கள் குங்பூ கற்றுக் கொண்டாராம்.
இந்நிலையில் நடிகர் ஜீவா அவர்கள் சென்னைக்கு சேலத்தில் இருந்து தனது குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடிகர் ஜீவாவில் கார் வந்து கொண்டிருந்த நிலையில் குறுக்கே வந்த ஒரு நபரை மோதாமல் இருப்பதற்காக திரும்பிய ஜீவாவின் கார் தடுப்பு சுவரில் மோதியது.
இதனால் ஜீவாவின் காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ள நிலையில் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்கள்.