“நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம்” ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு..!
தனது வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வரலாம் என்று எக்ஸ் தளத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சக்கர வியூகம் பற்றிய தனது பேச்சுக்காக அமலாக்கத்துறை தனது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ராகுல்காந்தி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு இரண்டு பேருக்கு பிடிக்கவில்லை எனவும் சக்கர வியூகம் குறித்த தனது பேச்சு பிடிக்காததால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தலாம் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமலாக்கத்துறையின் வருகைக்காக தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.