தலைநகர் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு சார்பாக தமிழக அமைச்சர் பிடீஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார் அப்போது அவர் தமிழகம் சார்பாக சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பிடீஆர் பழனிவேல் தியாகராஜன்சில கோரிக்கைகளை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முன்வைத்தார். அவர்,
சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் மற்றும் 600 கோடி மதிப்பிலான தாம்பரம்- செங்கல்பட்டு ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார்
மேலும்,அத்திப்பட்டு,ஊசு,கும்முடிபூண்டி,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி ரயில் திட்டங்களுக்கும் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கும் நிதி ஒதுக்க வேண்டும் எண்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் குறித்தான ஆலோசனையில் கோரிக்கை விடுத்துள்ளார்.