அண்ணாமலை மீது வழக்குப் பதிவு…!! பரபரப்பான கோவை…!!
கோவையில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காந்திபுரம் கோவை விகேகே மேனன் சாலையில் நேற்று இரவு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்தும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த பாட்ஷாவின் இறுதி ஊர்வலம் குறித்தும் அப்போது காவல்துறையினர் பாஜக மீது ஒடுக்குமுறையை செலுத்துவதாகவும், இந்த வீரத்தை சத்தியமங்கலத்தில் சதி திட்டம் போட்ட தீவிரவாதிகள் மீது ஏன் காட்டவில்லை என்றும் பேசியுள்ளார். அதன் பின்னர், சாலை மார்க்கமாக நடந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டுள்ளனர்,
இதனையடுத்து பேரணியில் ஈடுபட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். அதனை அடுத்து அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அவர் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாநகரமே பரபரப்பாகியுள்ளது.