ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாகவும், மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவில்லை என்று அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனுவை தாக்கல் செய்தது. அந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பை ஒத்தி வைத்தது. ஆளுநர் தரப்பு வாதங்களை நிராகரிக்க வேண்டுமென தமிழக அரசு வாதம் வைத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..