சீமான் உட்பட 22பேர் மீது வழக்கு..!! திருச்சி எஸ்பி வருண்குமார் அதிரடி..!!
கடந்த மாதம் நடைப்பெற்ற விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களை இழிவு படுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சட்டை முருகன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் உத்தரவில் பேரில் விடுதலை செய்யப்பட்டார். கைது செய்யும் போது அவரிடம் இருந்து கைப்பற்றபட்ட செல்போன் பின்னர் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அந்ந செல்போனில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் முக்கியமான உரையாடல்களின் ஆடியோ இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆடியோகள் சமூக வளைதலங்களில் ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம் திருச்சி எஸ்.பி வருண்குமார் தான் என்று நிர்வாகிகள் குற்றம் சாட்டினார். அத்துடன், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கு சமூக வலைதளங்களில் எஸ்பி வருண்குமார் பதில் அளித்ததுடன் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் வந்தார்.
இந்தநிலையில் கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை கைது செய்த தில்லைநகர் போலீசார் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-பவானி கார்த்திக்