கனமழை காரணமாக மழை நீரில் சிக்கிய கார்..!! கிண்டியில் தவிக்கும் வாகன ஓட்டிகள்..
நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையில்.., ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. முக்கியமாக கிண்டி கத்திபாராவில் தேங்கிய மழைநீரில் கார் ஒன்று சிக்கியுள்ளது.
அந்த காரில் இரண்டு வயதானவர்களும் ஒரு ஓட்டுனரும் இருக்கிறார். மழையால் அங்கு தண்ணீர் தேங்கி இருந்ததால்.., எந்த வாகனமும் அந்த பகுதியின் வழியே செல்லவில்லை.
ஆனால் இந்த கார் ஓட்டுனர் மட்டும் அந்த பகுதி வழியே சென்று தண்ணீரில் சிக்கி கொண்டுள்ளார். காரை திருப்பவும் முடியாமல், முன்னே செல்லவும் முடியாமல் திகைத்த அவர் முன்னே இயக்கி செல்லவும் முடியாமல்.., பின்னே இயக்கவும் முடியாமல் திகைத்து நின்றுள்ளார்.
பின் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன்.., அவர் காரை இயக்கி சென்றார், மழைநீர் அதிகம் தேங்கியுள்ள இடங்களில் யாரும் செல்ல வேண்டாம், எனவும் போக்குவரத்து காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
Discussion about this post