சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்..!!
ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்..
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கூட தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்..
தற்போது புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 14 மீனவர்கள் ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது.., அங்கு ரோந்து பணியில் சுற்றி திரிந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகுகளை கைப்பற்றியதுடன் 14 மீனவர்களையும் கைது செய்தனர்..
கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
கடந்தமுறை மீனவர்கள் கைது செய்யப்பட்டது தமிழக முதலமைச்சருக்கு இதுகுறித்த தகவல் கிடைத்த பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்..
மறுபுறம் ஒவ்வொரு முறையும் எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டு., அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன்.., மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கும் வரை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பவதால் இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணும் படி மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..