“இதுக்கு மேல உன்ன கவனிக்க முடியாது” – மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி.. கொலை செய்த தாய்..
கர்நாடக மாநிலம் சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு திருமணமாகி ரம்யா (35) என்ற மனைவியும் 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த தம்பதியினர் இருவரும் கணினி பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். இதில் ரம்யா குழந்தைகளை வளர்ப்பதற்காக சமீபத்தில் வேலையில் இருந்து நின்றுள்ளார்.
இந்த நிலையில் ரம்யா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தனது 4 வயது பெண் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, அவர் தனது மச்சினனின் செல்போன்க்கு தொடர்பு கொண்டு, குழந்தையை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி சுப்பரமணியபுர காவல் நிலையத்தில் ரம்யா மீது புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கொன்றது குறித்து ரம்யா அளித்த வாக்குமுலம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது வெங்கடேஷ், ரம்யா தம்பதிக்கு பிறந்துள்ள இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்று நல்ல உடல் நலத்துடன் இருப்பதால், தற்போது அந்த குழந்தை பள்ளிக்கு சென்று வருகிறது.
ஆனால் மற்றொரு குழந்தையான பிரதிகா வாய் பேச முடியாமலும், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அதனால் அந்த குழந்தையை வளர்க்க ரம்யா மிகவும் சிரமப்பட்டுள்ளார். அத்துடன் குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலன் கொடுக்காததால் மனம் உடைந்த ரம்யா நேற்று முன்தினம் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது அவர் அளித்த வாக்குமூலத்தின் முலம் போலீசாருக்கு தெரிய வந்தது.
அதையடுத்து ரம்யாவை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்