ஆம்பூர் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்..! பரபரப்பான திருப்பத்தூர்..!!
ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் போனஸ் மற்றும் மாத ஊதியம் சரிவர வழங்காததை கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம்.ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் செயல்பட்டு வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைப்புநிதி, மற்றும் மாத ஊதியம் வழங்காமல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வருவதாககூறி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு தினங்களாக தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்
இந்நிலையில் இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக்கூறி, சுமார் 100க்கும் மேற்பட்ட முற்றுகையிட்டு தொழிற்சாலை வளாகத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மற்றும் வருவாய்துறையினர், போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பேசி, ஊதியம் மற்றும் போனஸ் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில், போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்..