அதிமுக வின் முன்னாள் அமைச்சர் கே.டி . ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அவரின் நிபந்தனைகளற்ற ஜாமின் மனுவை சென்னை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார் மூன்று கோடி வரை பணம் பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி கைது செய்யபட்டர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மதம் நடந்த விசாரணையில் அவர் கைது செய்யபட்ட காவல்துறையை தாண்டி எங்கும் செல்ல கூடாது என்று நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையில் இடைக்கால ஜாமீனை நான்கு மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் அடுத்த 4 வாரங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்துறையை தாண்டி செல்ல கூடாது என்ற தடையை நீக்கி தமிழகம் முழுவதும் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நான்கு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த 1 ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது கே.டி. ராஜேந்திர பாலாஜி யின் வழக்கறிஞர் நிபந்தனைகளற்ற ஜாமீன் வழங்க கோரி மனு அளித்தார். இதனையே எதிர்த்து தமிழக அரசு சார்பான வழக்கறிஞர் நிபந்தனைகளற்ற ஜாமீனை ரத்து செய்ய கோரி கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கே.டி ராஜேந்திர பாலாஜி கேட்ட நிபந்தனைகள் அற்ற ஜாமின் மனுவை ரத்து செய்தது மேலும், காவல்துறைக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.