லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து, விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரித்து வரும் 22ம் தேதி வெளியாகவுள்ள கனெக்ட் படத்திற்கு திடீரெனெ திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா அட்லீ இயக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடித்து முடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை மாயா படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்குள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் சொந்த தயரிப்பு நிறுவனமான ரவுடி பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் கனெக்ட் படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
90 நிமிடங்கள் நீளும் இந்த படத்தில் இடைவெளியே இல்லாமல் வெளியாகும் என்று அந்த படத்தின் இயக்குனர் கூறினார். இதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் இதனை கடுமையா எதிர்த்து வருகின்றனர். இடைவெளி இல்லாமல் படத்தை வெளியிட திரிக்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த படம் 22ம் தேதி வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.