நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..!
உடல் ரீதியாக பலருக்கும் பல பிரச்சனைகள் உண்டு. ஆனால் உடல் பருமன் பற்றிய கவலை, அதை குறைக்க முடியுமா? என்ற கேள்வி உடல் பருமன் உள்ள அனைவருக்கும் இருக்கும்.
உங்கள் அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கிறார். சித்த மருத்துவர் வரலட்சுமி.
நெல்லிக்காய் நாம் உண்ணும் உணவில் மிக முக்கியமான ஒன்று. நெல்லிக்காயில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. நெல்லிக்காயில் வைட்டமின் -C அதிகம் காணப்படுவதால்.
நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீர் படுத்தி, உடல் பருமனை குறைப்பதற்கு உதவுகிறது.
* நெல்லிக்காயை சாப்பிடுவதை காட்டிலும். அதன் சாற்றை குடித்தால் நீர்வறட்சி ஏற்படுவதை குறைக்கும்.
* ஒரு நெல்லிக்காயின் அளவு 250 முதல் 950 மி.கி வரை இருக்கும். தினமும் நாம் ஒரு நெல்லிக்காய் எடுத்துக் கொண்டால் வைட்டமின்-C சத்து அதிகரிக்கும்.
* இதனால் உடலில் ஏற்படும் வாதம், பித்தம், என எந்த பிரச்னை இருந்தாலும், அவற்றை சீர் செய்து உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
அதனால் தான் சில பிட்டிங் சென்டரில் கூட நெல்லிக்காய் ஜூஸ் தருகின்றார்கள். அதற்காக சிலர் அதிகம் குடித்தால் சீக்கிரம் உடல் எடை குறையும் என நினைப்பார்கள். அது தவறு.
60 மில்லி முதல் 90 மில்லி அளவு வரை தான் குடிக்க வேண்டும்.