நோயாளிகள் வீட்டில் இருந்தாலும் ஐசியுல இருக்கா மாதிரி பண்ண முடியுமா..?
நோயாளிகள் அவர்களின் வீட்டில் இருந்தாலும் அவர்களை மருத்துவமனை ஐசியு பிரிவில் கண்காணிப்பது போன்று கண்காணிக்க முடியும், கோவை இராமநாதபுரம் அடுத்த பங்கஜா மில் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனை மருத்துவர் பிரவீன் ராஜ் பேட்டி,
கோவை இராமநாதபுரம் அடுத்த பங்கஜா மில் சாலையில், உள்ள ஜெம் மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களின், வீடுகளுக்கே சென்றாலும் அவர்களது, இரத்த அழுத்தம், பிபி இதயத்துடிப்பு, போன்றவற்றை, மருத்துவமனையில் இருந்தே கண்டறிந்து அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் கோட் ப்ளு எனும், புதிய கண்டுபிடிப்பை நமது ஜெம் மருத்துவமனையில் அறிமுகம் செய்தது.
இதுவரை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பொறுத்தி அவர்களை கண்கானித்து உள்ளதாக, இன்று மருத்துவமனையில் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரியும் மருத்துவருமான பிரவீன் ராஜ் தெரிவித்தார், மேலும் இது குறித்து அவர் கூறும் பொழுது,
மிக சிறிய அளவிலான சிப் போன்ற, பயோ சென்சார்களை நோயாளிகள் உடலில், பொருத்தப்பட்டு அவர்களின் செல்போனில் இதற்காக உள்ள செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டால் போதும் அவர்களை 24 மணி நேரமும், மருத்துமனையில் இருந்து மருத்துவ குழுவினர், கண்காணித்து, அவர்களின் உடல் நிலையை மேம்படுத்த முடியும்.
இது ஒரு நோயாளி மருத்துவமனையில் ஐசியு பிரிவில் இருப்பதை போன்று, அவர்களின் வீடுடில் இருந்து ஐசியு செயல்பாடுகளை அவர் பெறமுடியும், மேலும் பொறுத்த படும் சிப் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்.
மீண்டும் தேவைப்படுபவர்கள் மீண்டும் அடுத்த சிப்களை மருத்துவமனை வந்து பொறுத்தி கொள்ளலாம் என்றார் இந்த செய்தியாளர் சந்திப்பின் பொழுது, மருத்துவர்கள் ரகு, திவாகர் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post