கோ பேக் கவர்னர்..! ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திரும்பிய மக்கள்..?
கோவைக்கு வருகை தருகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அதன் தோழமை அமைப்புகளுடன் இனைந்து கருப்புக்கொடி போராட்டம் நடத்த இருப்பதாக காந்திபுரத்தில், கு. இராம கிருஷ்ணன் பேட்டி.
கோவை காந்திபுரம் பகுதியில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயளாளர் கு இராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது..
நீட் தேர்வு எதிர்ப்பு உட்பட, பல்வேறு தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையில், அந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல், தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்திருக்கின்ற மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை, என்றும் ஆளுநர் அறிவித்து, தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.
தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என் ரவி, வருகின்ற 24.8.2023 வியாழன் அன்று கோவை வருகை தர உள்ளார், அவரது வருகைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், மற்றும், அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை, கோவை லாலி ரோடு பகுதியில், நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..