சசிக்குமாரின் நந்தன்.. கவனத்தை ஈர்க்கும் போஸ்டர்..!
கோலிவுட்டில் இருக்கும் இயக்குநர்கள் சசிக்குமார் அவர்கள் முக்கியமானவர். சசிக்குமார் இயக்கியிருக்கும் இரண்டு படங்கள் இன்று வரை மக்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இயக்கிய முதல் படமான “சுப்ரமணியபுரம்” மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அடுத்ததாக சசிக்குமார் படங்கள் எதுவும் இயக்காமல் மாற்றாக நடிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தார். நாளை அவரது நடிப்பில் நந்தன் படம் வெளியாக உள்ளது.
சசிக்குமார் அவர்கள் இயக்குநர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குநராக சேது மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் பணியாற்றிவிட்டு பின் தானாக ஒரு கதையை உருவாக்கி அதை இயக்க திட்டம் போட்டு நடிகர் சாந்தனுவிடம் சென்று கூற ஆனால் அவரோ அதில் நடிக்க விரும்பாத நிலையில், அப்படத்தை எந்த நிறுவனமும் இயக்க முன்வரவில்லை பிறகு ஜெய்யிடம் கூறிய பின் ஓகே ஆகி சுப்ரமணியபுரம் வெளியானது.
இப்படத்தை யாரும் தயாரிக்க முன் வராத நிலையில் சசிக்குமாரே இதை தயாரித்தார். இதில் சசிக்குமார், ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். 2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க இப்படம் வெளியானது.
சுப்ரமணியபுரம் படமானது மதுரையை மையமாக வைத்தும் அரசியலில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக இளைஞர்கள் பலியாவதையும் மையமாக வைத்து இந்த படம் வெளியாகி மெகா ஹிட்டானது. இந்த படத்தில் சிறப்பான சண்டைக்காட்சிகள், எமோஷனல், காதல், வசனம், பாடல் என எல்லாமே பொருத்தமாக அமைந்து இந்த படம் வெற்றியடைந்தது.
சசிக்குமார் இயக்கிய இரண்டாவது படமான ஈசன் ஓரளவிற்கு நன்றாக ஓடியது. ஆனால் சசிக்குமார் அடுத்த படம் எதுவும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சசிக்குமார் அவர்களின் நடிப்பில் கடைசி படமான அயோத்தியானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் சசிக்குமார் படம் இயக்க வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
ஆனால் தற்போது இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் அவர்கள் நந்தன் எனும் படத்தில் நடித்துள்ளார். சரவணன் அவர்கள் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர், எனவே ரசிகர்கள் மத்தியில் நந்தனுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தை ஜிப்ரான் இசையமைத்தும், சமுத்திரக்கனியும் நடித்துள்ளாராம். தற்போது நந்தன் படம் நாளை தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
பொதுவாக ஒரு படத்தின் பிரோமோஷனுக்கு படக்குழு அவர்கள் நட்சத்திரங்களை குறிவைத்து பிடிப்பார்கள் ஆனால் இந்த படக்குழு பிரோமோஷனுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது அதில் சீமான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் படக்குழுவின் பிரோமோஷன் பற்றி பேசுவதும் பின் அவர்கள் மக்களிடம் சென்று படத்தை பார்க்கச்சொல்வதும் மக்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவது போலவும் வீடியோ உள்ளது.