அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டும் காட்டு யானை..!!
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் தொடரும் காட்டு யானை அட்டகாசம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பாரதி அண்ணாநகர் பேத்துப்பாறை அஞ்சுவீடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது.. . இந்த கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் மலைப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளின் அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகளான யானை, காட்டெருமை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது..
இதனால் பலலட்சம் ரூபாய் கடனாக பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.. . இதனை தொடர்ந்து கொடைக்கானல் பேத்துபாறை கிராமத்தில் விவசாய நிலங்களையும் காட்டுயானைகள் சேதப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வனத்துறையிடம் தெரிவித்த அப்பகுதி மக்கள் வனத்துறையுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளை நிரந்தரமாக விரட்ட வேண்டுமென கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
விவசாய பகுதிக்குள் நுழைந்து ஆட்டம் காட்டும் யானைகள் பிடிக்க கடந்த இரண்டு நாட்களாக அதிகாரிகள் போராடி வரும் நிலையில்., காட்டு யானைகள் அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..