தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம்..!! பரிதவிக்கும் மக்கள்..! உண்மை காரணம் இதோ..!
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் காரணமாக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் “சந்திரபாபு நாயுடு” இன்று அதிகாலை ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடக மற்றும் தெலுங்கானா முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதை தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு,கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் கோயம்பேடு மற்றும் வேலூர் வர வேண்டிய 27 பேருந்துகள் வந்து சேரவில்லை, அதிகாலை முன் 24 பேருந்துகள் மட்டும் வந்து சேர்ந்த நிலையில், ஆந்திராவில் இருந்து 27 பேருந்துகள் தமிழகம் வராமல் இருப்பதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் ஒரு பேருந்து ரேணிகுண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு பேருந்து திருத்தணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டிய 16 பேருந்துகள் ஆந்திராவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.
காஞ்சிபுரம் – திருப்பதி பேருந்து சேவை பாதிப்பு :
காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் இந்த பிரச்சனை தீரும் வரை திருத்தணி வரை மட்டுமே செல்லும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி இயக்கப்படுவதாகவும் போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் திருத்தணி வரை மட்டுமே செல்லும். திருத்தணியில் இருந்து பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்ட பிறகு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Discussion about this post