ஜி20 உச்சி மாநாட்டில் சீன தரப்பில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியாங் பங்கேற்றுள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்றும் நாளையும் மாநாட்டில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிறில் ரமாபோசா உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ரஷ்யா தரப்பில் அதிபர் புதினுக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பாரா என உற்று நோக்கிய நாடுகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்திய சீன எல்லைப் பிரச்சினை, சீன உள்நாட்டு பொருளாதார சிக்கலால் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு பதிலாக சீன பிரதமர் லீ கியாங் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
Discussion about this post