சாம்பாருக்குள் பிளாஸ்டிக் பாக்கெட்..!! சென்னை பிரபலமான ஹோட்டலில் ஏற்பட்ட சம்பவம்..!!
சென்னை தியாகராய நகர் பிஞ்சுளா சுப்பிரமணியன் தெருவில் உள்ள பிரபலமான விருதுநகர் அய்யனார் செட்டிநாடு உணவகம்.., இந்த உணவகத்தில் நேற்று மதியம் 1:30 மணியளவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் 15க்கும் மேற்பட்டோர் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.
சிக்கன் பிரியாணி, மட்டன் என அசைவ சாப்பாடுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது பிரியாணி உள்ளிட்டவை கெட்டு போனதால் பெண் ஊழியர்கள் உட்பட 6பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட சக ஊழியர்கள் ஓட்டல் உரிமையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஓட்டல் ஊழியர்களோ உணவின் தரம் சரியாக தான் உள்ளது.., நீங்கள் இதற்கு முன் சாப்பிட்ட உணவு வேணுமானால் சரியில்லாமால் போய் இருக்கலாம் என எதிர்வாதம் செய்துள்ளனர்.., அதில் ஆத்திரம் அடைந்த ஐடி ஊழியர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் மதியம் 3மணி அளவில் அங்கு வந்த அதிகாரிகள்.., ஐடி ஊழியர்கள் சாப்பிட்ட உணவை சோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
குளிர்சாதன பெட்டியில் கெட்டுப்போன இறைச்சிகளையும் அதற்கு மேல் கரப்பான் பூச்சிகள் ஓடுவதையும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.., இதனை தொடர்ந்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சாம்பாரில் பிளாஸ்டிக் பாக்கெட்டையும்.., பரோட்டா மாவின் மேல் ஈக்கள் மொய்ப்பதையும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த உணவுகளை எடுத்த அதிகாரி ஓட்டல் உரிமையாளரிடம் காண்பித்து நீங்கள் இதை சாப்பிடுவீர்களா என கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
மேலும் இந்த உணவகத்தை தற்காலிக மூட உத்தரவிட்ட அதிகாரிகள் நோட்டிஸ் வழங்கியதோடு ஆய்விற்காக சில உணவுகளையும் எடுத்து சென்றுள்ளனர்.
இந்த சமத்துவம் சென்னை தியாகராய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post