வி.கே.சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
வி.கே.சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்செந்தூர் வந்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேற்று(மார்ச்.05) நேரில் சந்தித்து பேசினார்.
தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஏற்னவே அதிமுகவில் வி.கே.சசிகலா இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், ந்த சந்திப்பால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படம் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட எஸ்.முருகேசன், வைகை கருப்புஜி, எஸ். சேதுபதி ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது