விபத்தில் மூளைச்சாவு அடைந்த் இளைஞர்.. தானம் செய்யப்பட்ட உடல் உறுப்பு..!
திருப்பூா் மாவட்டம், வேலம்பாளையத்தைச் சோ்ந்த நரேன் (19), பிரணவ், இப்ராஹிம் விஷால், பூபேஷ் ஆகியோா் கோவை தனியாா் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் திருப்பூா் நோக்கி காரில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி சென்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டது.
இதில், காரில் பயணித்த விஷால், பூபேஷ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் காயமடைந்த மூன்று பேர் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நரேன் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தாா். இதனை அறிந்த அவரது பெற்றோர் அவரில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனா். அதன்படி நரேனின் உடல் உறுப்புகள் இன்று காலை தானம் செய்யப்பட்டுள்ளது.
தகவலறிந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்