பள்ளி மாணவர்களுக்கான புத்தகம்.. விலையை உயர்த்திய தமிழக அரசு..!
பள்ளிக் கல்வித்துறையின் மீது அதிக கவனம் கொண்ட தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கான புத்தகத்தை, தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம், அச்சிட்டு வருகிறது. இந்த புத்தகங்கள், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, அரசு தரப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புத்தகங்களின் விலை, கடந்த 5 ஆண்டுகளாக, ஒரே மாதிரியாக தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது காகிதங்களின் விலை, அச்சடிப்பதற்கான விலை அதிகரித்துள்ளதால், புத்தகங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 – 40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 – 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40 – ரூ.70 வரையும், 9 – 12 வகுப்பு புத்தகங்கள் ரூ.50 – 80 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருசில புத்தகங்கள் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
-பவானி கார்த்திக்