ரயில்களில் மீண்டும் போர்வை, கம்பளிகள் வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரயில்வே சார்பில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் வழங்கப்பட்டு வந்தது. ரயில்வே வழங்கிய இந்த வசதி 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அளித்த உத்தரவில், ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் வசதிகளை மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.